கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி , ஓவியம்: வேலன்

''அரசியல்வாதிகளைவிட அதிகமா அடுத்தவங்க கால் தொட்டுக் கும்பிடுவது சங்கீதக் காரங்கதான்...'' என்றபடியே காலை நேர அரட்டைக்காக என் வீட்டுக்குள் நுழைந்தார் நண்பர். வந்தவர் நேரே சென்று, வரவேற்பறையில் அமர்ந்திருந்த என்னுடைய 94 வயது அப்பாவின் காலைத் தொட்டு வணங்கினார். நண்பர், அரசியல்வாதியோ அல்லது சங்கீத சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

''நடந்து முடிஞ்ச சென்னை இசைவிழாவின்போது, என் கண்ணில் பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். அன்றைய தினம், ஒரு சபாவில் விருது வழங்கும் வைபவம். முதல் வரிசையில் மூத்த இசைக் கலைஞர்கள் பலர் அடுத்தடுத்த இருக்கைகளில் உட்கார்ந்தி ருந்தாங்க. அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த பிரபல பாடகி ஒருவர், சீனியர்கள் ஒவ்வொருவரின் காலையும் குனிந்து குனிந்து தொட்டு வணங்கிட்டே போனாங்க...'' என்று விவரித்தார் நண்பர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்