துன்பங்களை அழிக்கும் தெய்வம்!

மிழக கிராம தெய்வங்களில் பிடாரி செல்லியம்மன் குறிப்பிடத்தக்கவள். இந்த அம்மனுக்கு 'பிடாரி’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பல காரணங்கள் சுவைபட விளக்கப்படுகின்றன.

பிடாரம் என்ற சொல்லுக்கு ஆட்டிவைத்தல் என்று பொருள். பகைவர்களை ஆட்டுவித்து ஓடச்செய்பவள் எனும் பொருளில் பிடாரி என்ற பெயர் வந்தது என்பார்கள்.  மற்றொரு பொருளும் உண்டு. பீடை என்றால் துன்பம். பீடையை  துன்பத்தை அரிபவள், அதாவது அழிப்பவள் என்பதால் பிடாரி என்ற பெயர் பொருத்தம் என்றும் சொல்வார்கள்.

'பிடாகை’ என்றால் கூடை. கூடையில் வைத்து வழிபடப்பட்ட பெண் தெய்வங்களே பிடாரி ஆனது என்பார்கள் சில பெரியோர்கள்.

பிடாகை எனும் சொல்லுக்கு தனித்திருக்கும் இடம் என்றும்  பொருள் கூறுவர். ஊரைவிட்டு ஒதுங்கி அமைந்திருக்கும் இடத்தில் காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் பிடாரி எனப்படுகிறாள்.

சிலப்பதிகாரத்தில் 'அடங்காப் பசுந்துணி பிடர்த்தலைப் பீடம் ஏறிய வெற்றி வேல் தடக்கை கொற்றவை’ என்று துர்கை விவரிக்கப்படுகிறாள். பிடர்த்தலை மீது நின்ற பெண்ணாதலின், பிடாரி ஆனாள் என்றும் கூறுவர்.

அருண வசந்தன், சென்னை4

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick