கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வள்ளுவர் வழியில்...

ரு வாரத்துக்கும் மேலாக நண்பர் ரொம்ப பிஸியாக இருந்தார். என்னுடன் வாக்வித்டாக் அரட்டைக்கு பார்க் பக்கம் வரவில்லை. வருடத்துக்கு இரண்டு முறை இப்படி 'ஒரு வார லீவு’ போட்டுச் சென்றுவிடுவார், அப்ளிகேஷன் எதுவும் கொடுக்காமல்! நண்பரின் அப்பா, அம்மாவுக்குத் திதி என நானும் புரிந்துகொள்வேன்.

இந்த ஒரு வாரத்தில், திதி முடிவதற்குள் இருபது தடவை புரோகிதருக்கு போன் செய்துவிடுவார். ''பத்து மணிக்கெல்லாம் வந்துடுங்க' என்பதைப் பத்து முறை அழுத்திச் சொல்வார். ''ஏனோதானோன்னு இல்லாம சிரத்தையா பண்ணி வைக்கணும், சொல்லிட்டேன்! மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்துல சொல்லிட்டுப் போகக்கூடாது. நிறுத்தி நிதானமா, புரியற மாதிரி சொல்லணும். சொல்ல மறந்துட்டேனே... காரியம் நடந்து முடியறவரைக்கும் உங்க செல்போனை சைலன்ட் மோட்ல போட்டுடணும்' என உத்தரவுகள் பிறப்பிப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்