சித்தமெல்லாம் சித்தமல்லி - 2 !

நிவேதிதா

வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய கிராமம் தான் சித்தர்களின் பூமியான சித்தமல்லி. சித்தர்களின் பூமி எனும்போது, அங்கே சித்துக்களுக்குக் குறைவிருக்குமா என்ன? மேலும், அந்தச் சித்துக்கள் எல்லாம் மனித குலத்தின் நன்மைக்காகவே இருக்கும் என்பதும் உண்மைதானே?! அப்படி, சித்தர் பெருமக்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தப் புனித பூமிதான் விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்றொரு அருள்வாக்கு கிடைத்திருக்கிறது. 

சித்தமல்லி கிராமத்தின் மேற்குப்புறத்தில், திருச்சி முக்கொம்பில் இருந்து பிரிந்து கும்ப கோணம் அணைக்கரை அருகில் கீழணையில் கலக்கும் கொள்ளிடம் உத்தரவாஹினியாகத் தவழ்ந்து ஓடுகிறது. அந்தக் கிராமத்தில் கிழக்கு மேற்காக நீண்டு கிடக்கும் அக்ரஹார வீதியில், தெற்குப் பார்த்த ஒரு வீட்டில் வசித்து வருபவர் நாகராஜன் என்னும் அன்பர். சில காலத்துக்கு முன், அவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்