170-வது திருவிளக்கு பூஜை

‘மகாசக்தியே இறங்கி வருவாள் !’ரா.வளன்

'வீட்டுக்கு வரும் மருமகளை விளக்கேற்ற வரும் மகாலட்சுமியாக போற்றும் பண்பாடு நம்முடையது. பெண்களும், தெய்வமும் வேறு வேறு அல்ல. பெண்களே இப்பூலோகத்தின் அருட்பெருஞ் ஜோதி' என சிறப்பு விருந்தினர் கவிஞர் அண்ணா சிங்காரவேலு பேசத் துவங்க, விளக்கு பூஜைக்கு வந்திருந்த வாசகியர் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டி ஆமோதித்தார்கள். சக்தி விகடன் நடத்திய 170வது திருவிளக்கு பூஜை, கடந்த 28.7.15 அன்று கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. 

'கோயில் நகரம் என்று போற்றப்படும் புண்ணிய பூமி கும்பகோணம். இந்தத் திருத்தலத்தில் நடைபெறும் இந்த விளக்குபூஜை மாபெரும் வேள்விக்குச் சமம். பெண்கள் முன்னின்று நடத்தும் ஒவ்வொரு பூஜைக்கும் தனி சக்தி உண்டு. இங்கே அந்த சக்தி எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்ஜோதி யாய் ஒளிர, மகா சக்தியே இறங்கி வந்து அருள் செய்வாள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சர்வ மங்கலங்களும் நிறைந்திருக்கும்; லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். சகலவிதமான பிரார்த்தனைகளும் குறையின்றி நிறைவேறும்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்