வைகையின் மடியில்... தமிழர் நாகரிகம் !

மதுரையின் மாண்பு !எஸ்.கண்ணன்கோபாலன்

லக நாகரிகங்கள் அனைத்தின் முன்னோடி நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம்தான். இந்தப் பேருண்மையை பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் உட்பட பல அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தகுந்த ஆதாரங்களுடன் சொல்லி இருக்கின்றனர். அது மட்டுமின்றி தென் தமிழகத்தில் நடைபெற்ற பல அகழ்வாய்வுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. 

இதோ இப்போதுகூட மதுரைக்கு அருகில் பள்ளிச்சந்தைத் திடல் என்னும் இடத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மண்ணுக்குள் புதையுண்டு போன சுமார் 2500 வருடங்களுக்கு முந்தைய ஒரு குடியிருப்புப் பகுதி வரிசை வரிசையான வீடுகளுடன் கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பலவும் தமிழர்தம் நாகரிக வளர்ச்சியையும் அவர்தம் பொருளாதார வளத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்