ஹலோ விகடன் - அருளோசை

வாசகர்களுக்கு வணக்கம்...

 

தன்னம்பிக்கை இருந்தால்தான் பூரண வெற்றியைப் பெற முடியும் என்பார்கள் பெரியோர்கள். தன்னை நம்பும் ஒருவனால் மட்டுமே உண்மையை உணர முடியும்; மிகத் துல்லியமாக இலக்கை அடையமுடியும். சரி! தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள என்ன செய்வது? ஆலய வழிபாடு அதற்கு உதவி செய்யும். ஆண்டவனிடம் லயிக்கும் மனதில் வலிமை பெருகும். அதன் விளைவாக தன்னம்பிக்கையும் கூடும்.

பாரதப் போர் தெரியும்தானே? அந்த யுத்தம் வெறும் புராணச் சம்பவம் மட்டுமே அல்ல. ஆண்டவன் தன்னுடைய அணுக்க பக்தனின் தயக்கத்தைக் களைந்து, அவனுள் தன்னம்பிக்கையைப் பெருகச் செய்த களம் அல்லவா குருக்ஷேத்திரம்? அர்ஜுனனுக்கு மட்டுமா... அரிய போதனைகளால் நமக்குள்ளும் தன்னம்பிக்கையை விதைக்கும் ஞான பாடம் பகவத்கீதை! இதுகுறித்தும், இன்னும் பல ஆன்மிக தகவல்களையும் 20.1.15 முதல் 26.1.15 வரை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

மணிகண்டன், ஆன்மிக பேச்சாளர்


வாசகர்களுக்கு வணக்கம்...

இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான். அதை நாம்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் அவனது இருப்பை உணர்ந்தால் போதும்; மனம் சோர்வைச் சந்திக்காது; நம் வாழ்வும் தோல்வியைச் சந்திக்காது. இதற்கு உதாரணமான சில சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள போகிறேன்.

அதுமட்டுமா? இறைவனை அடைவதற்கான வழிமுறை வழிபாடு. அப்படி, இறைவனின் பாதத்தை அடைந்த எத்தனையோ மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அவர்களில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பிடம் உண்டு. அவருடைய அனுக்கிரகத்தையும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்களேன். 27.1.15 முதல் 2.2.15 வரை சிந்தை மகிழ சில நிமிடங்கள் ஆன்மிகத்தில் திளைத்திருப்போம்.

   கே.வி.கே.பெருமாள், ஆன்மிக பேச்சாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick