உள்ளங்கையில் சில உண்மைகள்

குரு மேடு...சுக்ர சின்னம்!‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ள்ளங்கையில் கிரக மேடுகளைப் போன்று ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய சின்னங்களும், வேறு சில குறிகளும் கோடுகளும்கூட நம் கையில் இடம்பெற்றிருக்கும். இதுகுறித்த விவரங்களை இங்குள்ள அட்டவணையைப் பார்த்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கிரகங்களுக்கு உரிய சின்னங்கள் அந்தந்த மேடுகளில்தான் இருக்கும் என்றில்லை. அவை வெவ்வேறு மேடுகளிலும் அமையும். சென்ற இதழில், சனி மற்றும் குரு மேடுகள் குறித்தும், அந்த மேடுகளில் உள்ள குறியீடுகள்  சின்னங்கள், அவை தரும் பலா பலன்கள் குறித்தும் பார்த்தோம். மற்றுமுள்ள கிரக மேடுகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம். 

சூரிய மேட்டில்...

ஒரு கோடு: மிகுந்த செல்வம், கௌரவம், மரியாதை.

பல கோடுகள்: கலைகளில் ஈடுபாடு, உயர் பதவி.

குறுக்கு நெடுக்குக் கோடுகள்: கலைத் துறையில் நுழைவதற்கான முயற்சிகள், செயல்பாடுகள். குழப்பங்கள்

புள்ளி: ஏமாற்றம், இழப்பு.

பெருக்கல் குறி: பெற்ற பெருமைகளை இழத்தல், அவமானம்.

நட்சத்திரம்: கலைத்துறையில் ஈடுபாடு, திறமை, செல்வம், பதவி.

சதுரம்: ஏமாற்றங்கள் தவிர்க்கப்படுதல், சமூகத்தில் மரியாதை.

முக்கோணம்: கலைத் துறையில் கௌரவம்

வட்டம்: புகழ், வெளிநாட்டுப் பயணம்.

வலை: கலைத் துறையின் மீதான ஈடுபாட்டால் குழப்பம், தோல்வி.

சூரியனின் சின்னம்: சூரிய மேட்டின் தன்மைகள் அமைதல், புகழ், பெருமை, செல்வாக்கு, கலை வாழ்வு.

சனியின் சின்னம்: குறுக்கு வழிகளில் ஈடுபாடு, ஏமாற்றங்கள்.

குருவின் சின்னம்: அறிவாற்றலால் புகழ், அரசியலில் வெற்றி.

சுக்கிரன் சின்னம்: கலைத் துறையில் ஈடுபாடு, உலக சுகங்களை அனுபவித்தல்.

சந்திரனின் சின்னம்: இலக்கியத் துறையில் திறமை, உயர்வு.

செவ்வாயின் சின்னம்: போர்த் தொழிலில் ஈடுபாடு, தலைவனாகும் தகுதி.

ராகுவின் சின்னம்: உடல் நலம் பாதிப்பு.

கேதுவின் சின்னம்: தீர்மானங்கள் எடுப்பதில் தவறு.

புதன் மேட்டில்...

ஒரு கோடு: செல்வம், வளம்

பல கோடுகள்: வியாபாரத்தில் திறமை, வெற்றி

குறுக்கு நெடுக்குக் கோடுகள்: பல தொழில்களை ஒரே நேரத்தில் செய்வதால் சிரமம்

புள்ளி: வியாபாரத்தில் நஷ்டம்.

பெருக்கல் குறி: வியாபாரத்தில் பெருத்த நஷ்டம், தவறுகள் செய்தல்.

நட்சத்திரம்: வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரம், அதன் மூலம் செழிப்பான வருமானம்.

சதுரம்: நஷ்டங்களை முன்னதாகவே அறிந்து தவிர்த்தல்.

முக்கோணம்: வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருதல்.

வட்டம்: எதிர்பாராத நஷ்டம்

வலை: அவமானம், ஏமாற்றம்

புதனின் சின்னம்: வியாபாரத்தில் வெற்றி வாய்ப்பு மற்றும் புதன் மேட்டின் இயல்புகள் அமையும்.

குருவின் சின்னம்: வியாபாரத் துறை பற்றிய கல்வி மேம்பாடு.

சனியின் சின்னம்: எதிர்பாராத இடைஞ்சல்கள், முடிவுகளில் தவறுகள்.

சூரியனின் சின்னம்: சமயத் துறையில் ஈடுபாடு, நியாயத்தன்மை.

சுக்கிரன் சின்னம்: குறுக்கு வழிகளில் ஈடுபாடு.

சந்திரனின் சின்னம்: ஏமாற்றுதல், ஏமாறுதல்.

செவ்வாயின் சின்னம்: சொத்துக்களை விற்று வியாபாரம் செய்தல். அதில் லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு.

ராகுவின் சின்னம்: கடும் உழைப்பு, லாப நஷ்டம் மாறி மாறி வரலாம். உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

சுக்ர மேட்டில்...

ஒரு கோடு: உலகியல் மற்றும் உடல் பற்றிய ஆசைகளில் பற்று.

பல கோடுகள்: எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு.

குறுக்கு நெடுக்குக் கோடுகள்: அன்பு மற்றும் காதலில் எதிர்பாராத தோல்வி.

புள்ளி: உடல் நலம் பாதிப்பு.

பெருக்கல் குறி: ஆசை, பற்று, காதல் ஆகியவற்றில் தோல்வி.

நட்சத்திரம்: பொருள் நஷ்டம், மனக் கஷ்டம்.

சதுரம்: குற்றம் புரியும் எண்ணத்தில் இருந்து பாதுகாப்பு.

முக்கோணம்: மிக அதிகமான பாலியல் தொடர்புகள்.

வட்டம்: எதிர்பாராத விபத்துகள்.

வலை: அடிக்கடி உடல் நலம் அல்லது மன நலம் குன்றுதல்

சுக்ரனின் சின்னம்: சுயநலம் மிக்க ஆசைகள்.

குருவின் சின்னம்: புகழை விரும்புதல்.

சனியின் சின்னம்: பொறாமை, பிடிவாத குணம், விருப்பு  வெறுப்புகள்.

சூரியனின் சின்னம்: நேர்மையான நேசம்  காதல் உணர்வு.

புதனின் சின்னம்: பணத்தில் பேராசை.

சந்திரனின் சின்னம்: சரீர சுகங்களில் ஈடுபாடு.

செவ்வாயின் சின்னம்: நியாயமற்ற ஆசைகள்.

ராகுவின் சின்னம்: விரும்பியதை அடையும் பிடிவாதம்.

கேதுவின் சின்னம்: தந்திரம், சாமர்த்தியம்.

செவ்வாய் மேட்டில்...

ஒரு கோடு: அபார தைரியம்.

பல கோடுகள்: பிறரை இம்சிக்கும் இயல்பு.

குறுக்குநெடுக்குக் கோடுகள்:  சண்டை குணம்.

புள்ளி: போர் அல்லது சண்டையில் அடிபடுதல்.

பெருக்கல் குறி: யுத்தம் அல்லது எதிர்பாராத காரணத்தால் உயிராபத்து.

நட்சத்திரம்:  ராணுவம்  காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பு.

சதுரம்: அதிக அளவிலான கோபம்.

முக்கோணம்: திட்டமிட்டுச் செயல்படும் திறமை.

வட்டம்: ராஜ தந்திரம்.

வலை: தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணம்.

செவ்வாயின் சின்னம்: ஆதிக்கம் செலுத்துதல், உடல் வலிமையைக்

   காட்டி முக்கியத்துவம் பெற முயற்சி செய்தல்.

குருவின் சின்னம்: பிறரை வசீகரிக்கும் தன்மை.

சனியின் சின்னம்: கடுமையான அல்லது கொடும்குணம்.

சூரியனின் சின்னம்: அதீத தற்பெருமை.

புதனின் சின்னம்: எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டுதல்.

சுக்ரனின் சின்னம்: உடலியல் ஆசையில் ஈடுபாடும் அவசரமும்.

சந்திரனின் சின்னம்: மனக்குழப்பம்  சிந்தனை தடுமாற்றம்.

செவ்வாயின் சின்னம்: பூமி முதலான சொத்துக்கள் வாங்கும் திறமை.

சந்திர மேட்டில்...

 

ஒரு கோடு: கற்பனைத் திறன்

பல கோடுகள்: அழகை வழிபடும் இயல்பு.

குறுக்கு நெடுக்கான கோடுகள்: தேவையற்ற பயம்.

புள்ளி: ஆசை, காதல் விஷயங்களில் அவசர முடிவும் தோல்வியும்.

பெருக்கல் குறி: அவமானம், ஏமாற்றம்.

நட்சத்திரம்: பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும்.

சதுரம்: செல்வங்களை சேமிக்கும் அல்லது பாதுகாக்கும் தன்மை.

முக்கோணம்: கவிதை மற்றும் கலைத் திறமை.

வட்டம்: தண்ணீரினால் ஆபத்து

வலை: எதிர்பாராத ஏமாற்றம், தோல்வி மனப்பான்மை.

சந்திரனின் சின்னம்: சுயநலம், தவறான முடிவெடுக்கும் தன்மை.

குருவின் சின்னம்: தைரியம், ஆர்வம்.

சனியின் சின்னம்: தவறுகளைச் சரியெனக் கருதும் இயல்பு.

சூரியனின் சின்னம்: அதிர்ஷ்டத்தை நம்பி தவறான முடிவுகள் எடுப்பது.

புதனின் சின்னம்: தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை.

சுக்ரனின் சின்னம்: உலகியல் மற்றும் சரீர ஆசைகள்.

செவ்வாயின் சின்னம்: மனக்குழப்பம்  சிந்தனை தடுமாற்றம்.

ராகுவின் சின்னம்: அபார தன்னம்பிக்கை.

கேதுவின் சின்னம்: அவசர முடிவுகள்  பொறுமையின்மை.

ராகு  கேது மேட்டில்...

ஒரு கோடு: வீரம், சாகஸம்.

பல கோடுகள்: கலைகளில் ஈடுபாடு, குரோதம், கோபம்.

குறுக்கு நெடுக்கான கோடுகள்: பொறுப்புகளைத் தட்டிக்கழித்தல்.

புள்ளி: எப்போதும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம்.

பெருக்கல் குறி: ஏமாற்றம், அவமானம்.

நட்சத்திரம்: போர், காவல்துறை போன்றவற்றில் சாதனைகள்.

சதுரம்: விபத்துக்களையும், ஆபத்துக்களையும் சமாளிக்கும் இயல்பு.

முக்கோணம்: பல்வேறு வகைகளில் பொருள் ஈட்டுதல்.

வட்டம்: பாதுகாப்பு மற்றும் காவல் துறையில் உயர் பதவி.

வலை: கோபத்திலும் அவசரத்திலும் தவறுகள் செய்யும் தன்மை.

குருவின் சின்னம்: பகுத்தறிவு, பற்று, இறை நம்பிக்கை.

சனியின் சின்னம்: பிறரை ஏமாற்றும் தன்மை, குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் இயல்பு.

சூரியனின் சின்னம்: தாழ்வு மனப்பான்மை, பலவீனம்.

புதனின் சின்னம்: பேராசை, சுக வாழ்வில் நாட்டம்.

சுக்ரனின் சின்னம்: சரீர சுகங்களில் அளவுகடந்த ஈடுபாடு.

செவ்வாயின் சின்னம்: அசையாச் சொத்துக்கள் சேர்ப்பதில் ஈடுபாடு.

ராகுவின் சின்னம்: உடல் நலக் குறைவு.

கேதுவின் சின்னம்: தவறான சிந்தனை, அதனால் ஏமாற்றங்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் பன்னிரண்டு ராசிகளையும், பன்னிரண்டு வீடுகளாகக்கொண்டு, எந்தந்த வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, பகையாகவோ, நீச்சமாகவோ, சமமாகவோ இருக்கும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் ஒருவர் பிறக்கின்ற நேரத்தில், ஜாதகக் கட்டங்களில் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைக் கொண்டே அந்த ஜாதகனின் குண இயல்புகள், வாழ்வியல் சம்பவங்கள், நல்லது, கெட்டது ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சொல்வார்கள். பிறக்கும் நேரத்தை வைத்து, குறிக்கப்படும் லக்னத்தை முதல் வீடாகக் கொண்டு, அதிலிருந்து அமையும் கிரகங்களின் வரிசையை வைத்து ஜாதக பலன்கள் சொல்லப்படுகின்றன.

இந்த ஜோதிடத்துக்கும் மேடுகள் சின்னங்கள் குறித்து நாம் தெரிந்து கொண்ட விஷயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது ஆராய்ந்து பார்த்தால் விளங்கும். இனி, உள்ளங்கையில் ஓடும் ரேகைகள், அவற்றின் தன்மைகள், அவற்றால் நிர்ணயிக்கப்படும் மனிதக் குணங்களைப் பற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் தெரிந்துகொள்வோம்.

தொடரும்...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick