மனதை அள்ளும் புத்த கயா!

புத்தம்... சரணம்...இ.லோகேஸ்வரி

கெளதம புத்தருடன் தொடர்பு கொண்ட யாத்திரைத் தலங்கள் நான்கு. அதில், புத்த கயாவே முதன்மையானது. இங்குள்ள ஆலயம் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 

கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடம் புத்த கயா. போதி (அரச) மரத்தின் கீழ் புத்தருக்கு ஞானம் கிடைத்ததால், இதை 'போதி கயா’ என்றும் அழைப்பார்கள்.

 பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ளது புத்த கயா எனும் புண்ணிய பூமி.

 உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்கள், புத்த கயாவை புனிதத் தலமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

 அந்தக் காலத்தில், போதி மண்டபம் எனப்படுகிற இந்த இடத்தில், துறவி மடக் குடியேற்றம் என்று மிகப் பெரிய அளவில் இடம் இருந்ததாகத் தெரிவிக்கிறது வரலாறு.  

 புத்த கயாவில் உள்ள முதன்மையான துறவி மடம், போதி மண்டா விகார். இதை மகா போதி கோயில் என்கின்றனர்.

 இந்தத் திருத்தலத்தை, போதி மண்டா என்றும், விகாரை போதி மண்டா விகார் என்றும் குறிப்பிடுகின்றன நூல்கள்.

 கோயிலின் மேற்குத் திசையில் அமைந்துள்ளது புத்தர் ஞானம் பெற்ற போதிமரம். 

 செங்கல் கட்டுமானத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது இந்தக் கோயில். பிற்காலக் கட்டடக் கலைக்கு இது முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகவும் பெருமையுடன் சொல்வார்கள்.

சுமார் 300 அடி உயரம் கொண்ட புத்தரின் திருவுருவச் சிலையை இங்கே தரிசிக்கலாம்.

 மகா போதி கோயிலின் கோபுரம், சுமார் 55 மீட்ட உயரம் கொண்டது.

 கோயிலின் நாலாபுறமும் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புகள் அழகுறக் காட்சி தருகின்றன.

 இந்தத் தடுப்பு அமைப்பு களில், இரண்டு புறம் யானை பூஜை செய்கிற கஜலட்சுமியின் சிற்பமும், குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருவது போன்ற சிற்பமும் இடம் பெற்றுள்ளன.

புத்த கயாவை 'உலகப் பாரம்பரிய களம்’ என்று கடந்த 2002ம் வருடம் அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம்.

புத்த கயாவை தரிசித்துவிட்டு, பாட்னாவுக்குத் திரும்பும் வழியில் பால்கு நதிக்கரையில் அமைந்து உள்ள விஷ்ணுபுத் மந்திரையும் தரிசிக்கலாம்.

படங்கள்: முனீஸ்வரராஜா பழனியப்பன்

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick