சென்னையில் ஆன்மிகக் கண்காட்சி!

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் சார்பில், சென்னையில் கடந்த ஆறு வருடங்களாக ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின்கல்லூரி வளாகத்தில் 7வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற உள்ளது.

'எல்லாமே இறைவனே, இறைவனின் வடிவங்களே’ என்பதை வலியுறுத்தும் ஹிந்து தர்மத்தின் ஆறு அடிப்படைப் பண்புகளான வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், எல்லா ஜீவராசிகளையும் ரக்ஷித்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோரைப் போற்றி வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றின் அவசியத்தை வலியுறுத்துதல் ஆகிய ஆறு அம்சங்களைப் பலருக்கும் வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கண்காட்சியின் ஒரு சிறப்பம் சமாக, கண்காட்சியின் 3வது நாளான 5.2.15 அன்று 'சக்தி விகடன்’ ஆன்மிக இதழ் தனது வாசகர்களுக்கெனப் பிரத்தியேகமாக திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் தலைமையில் 'திருப்புகழ் மகாமந்திர பூஜை’யையும், பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசைக் கச்சேரியையும் நடத்தவுள்ளது.

மிகவும் விசேஷமான இந்தத் திருப்புகழ் மகாமந்திர பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுவதோடு, கந்தனின் கருணையை விளக்கிச் சொல்லும் சுவையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் ரசித்து இன்புற்று, முருகப்பெருமானின் திருவருள் பெற்றுச் சிறக்க வேண்டுகிறோம்!

நமது நிருபர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick