வளம் தரும் வாஸ்து

உங்கள் மனையில் ஜீவன் உள்ளதா?வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

னை ஜீவன் உள்ளதா என்பதைக் காண (வாஸ்து வித்யை), முதலில் மனையின் நீளம், அகலம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் கண்டறிய வேண்டும். அடுத்து, மனை உள்ள ஊரின் பெயர் முதல் எழுத்து வர்க்கம்  வர்க்க எண்ணை அறியவேண்டும். வர்க்கம்  வர்க்க எண் குறித்த பட்டியல் பெரிது. உதாரணத்துக்கு சில வர்க்கங்களைக் காண்போம்.  

 

வர்க்கம்                         வர்க்க எண்

'அ’ வர்க்கம்                            1

'க’ வர்க்கம்                             2

'ச’ வர்க்கம்                              3

'ட’ வர்க்கம்                             4

'த’ வர்க்கம்                             5

'ப’ வர்க்கம்                             6

'ய’ வர்க்கம்                             7

இந்த வர்க்க எண்ணையும் மனையின் நீளஅகலத்தை கூட்டிவரும் எண்ணையும் சேர்த்துக் கூட்டி, இந்த கூட்டுத் தொகையை 4ல் பெருக்கிக் கொள்ளுங்கள். விடையாக ஓர் எண் கிடைக்கும்.

அடுத்ததாக மனைக்குச் சொந்தக்காரரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். இந்த எண்ணிக்கையை மேலே விடையாகக் கிடைக்கும் எண்ணுடன் சேர்த்துக் கூட்டி, அந்த கூட்டுத்தொகையை மூன்றால் வகுக்க வேண்டும். (சிவபெருமானின் கண்கள் மூன்று என்பதால், 'சிவநேத்திரம்’ என்ற பெயரில் மூன்றால் வகுக்கப்படுகிறது).

இப்போது மீதி வரும் எண் ஒன்றானால், அந்த மனை ஜீவன் உள்ளதாகும். மீதி எண் இரண்டு எனில், அந்த மனை நடுத்தரமானது. மீதி சூன்யம் எனில், அந்த மனை பயனற்றது!

உதாரணமாக தஞ்சையில் உள்ள ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான ஒரு மனையின் நீளம் 60 அடி; அகலம் 42 அடி. எனில் நீள  அகலத்தின் கூட்டுத்தொகை 102 அடி. இத்துடன் ஊரின் முதல் எழுத்தின் வர்க்க எண்ணை கூட்டவேண்டும். அதன்படி தஞ்சையின் முதல் எழுத்து 'த’ வர்க்கம்; வர்க்க எண்  5. இதை, மனையின் நீளஅகல கூட்டுத்தொகையுடன் கூட்டவேண்டும். எனில், 102 5 = 107.

இதை 4ல் பெருக்க வரும் விடை  428.

இப்போது அந்த நபருடைய பெயரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று பாருங்கள். ரா  ஜ  கோ  பா  ல்  5 எழுத்துக்கள் உள்ளன. எனவே, 428 உடன் 5ஐ கூட்டவேண்டும். எனில், 433. இந்த கூட்டுத் தொகையையே 3ல் வகுக்க வேண்டும். மீதி எண் 1. ஆக, ராஜகோபால் எனும் இந்த நபருடைய மனை ஜீவன் உள்ளதாகும்.

பெரிய பெரிய கட்டடங்களை கட்டும் நிலையில் பெரும்பாலும் இந்த அமைப்பின்படி ஆராய்வது இல்லை என்றே தெரியவருகிறது. திருக்கோயில் கட்டுமானம் ஆரம்பிக்கும்போது, முக்கிய பொறுப்பாளரின் பெயருக்கும் மனைக்கும் மேற்கண்டவாறு பொருத்தம் உள்ளதா எனப் பார்த்து, அவரையே கர்த்தாவாக்கி கட்டுமான வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

இனி, கட்டடம் கட்டும்போது கவனிக்கத்தக்க குறைகளாக சில விஷயங்கள் விளக்கப்படுகின்றன. இதை 'வேதை’ என்பார்கள். நாமும் அதுகுறித்து அறிந்துகொள்வோம்.

சிவ வேதை: இல்லத்தின் நேர் எதிரில் 300 அடிக்குள் சிவாலயம் அமைந்து இருத்தல் கூடாது.

சக்தி வேதை: இல்லத்தின் நேர் எதிரில் 300 அடிக்குள் சக்தி கோயில் அல்லது விக்ரகம் இருந்தால் குற்றமாகும்.

விஷ்ணு வேதை: இல்லத்தின் நேர் எதிரில் விஷ்ணு கோயில் (அ) விக்கிரகம் இருந்தால் வேதையாகும்.

மட வேதை: துறவிகள் வாழ்கின்ற மடத்துக்கு நான்கு புறங்களிலும் 200 அடி தூரத்துக்குள் இருந்தால் அங்கு வசிப்பவர் பொருட்கள் திருட்டு போகும்.

தரும சாலா வேதை: தர்ம சத்திரத்தின் எல்லையைச் சுற்றி 200 அடிக்குள் குடியிருப்பு அமைந்தால், அங்கு வசிப்பவருக்கு தீய நடத்தையும், மன சஞ்சலமும் ஏற்படும்.

தேவதா வேதை: இல்லத்தில் தலைவாயிலுக்கு நேர் எதிரில் எந்த கோயில் இருந்தாலும் குற்றமாகும். இங்கு வாழ்வோரின் வாழ்க்கை வசதிகள் குன்றும்.

சூரியகிரணாவத வேதை: கோயிலானாலும், வீடானாலும் சூரிய உதயம் முதல் 3 மணி நேரமும், சூரியன் மறையும் முன் 3 மணி நேரமும், சூரிய ஒளி பட வேண்டும். இவ்வாறு அமையவில்லை என்றால் குற்றம் ஏற்படும்.இந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும். கால்நடைகளுக்கும் அழிவு ஏற்படும்.

தரு வேதை: கோயில்களில் பயன்படுத்திய மரங்கள், பலகைகளை வீட்டுக்குப் பயன்படுத்தினால் இல்லாள் துன்பம் அடையவும், நோய், கலகம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

பிரேத தூத வேதை: மயானத்தில் எரியும் பிணத்தின் புகை பரவும் வகையில் அமைந்த இல்லத்தில் இருப்போர்கள் ஆரோக்கியக் குறைவையும், அகால மரணத்தையும் சந்திப்பார்கள்.

நிசாசர வேதை: இல்லமதில் சூரிய ஒளி பகலில் நன்கு படவும், இரவினில் சந்திர ஒளி நன்கு படவும் இருப்பது நன்மை. அவ்வாறு இல்லாமல் இருந்தால் தீராத நோய்கள் ஏற்படும்.

பர்வத வேதை: வீட்டின் மீது மலையின் உச்சி, மலையின் சாய்வு, மலையின் அடிவாரம் ஆகியவற்றின் நிழல் பரவினால் செல்வ அழிவு ஏற்படும்

ஸங்காத வேதை: வீட்டின் முன் கால்நடைகளை கொல்லும் களம் இருந்தால், இல்லத் தலைவனின் ஆயுள் குறையும். புகழ் மங்குதலும் ஏற்படும்.

கூப வேதை: வீட்டின் தலைவாசலுக்கு நேர் எதிரில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் தலைவனுக்கு விபத்துக்கள் (அ) இதயம் சம்பந்தமான (சுவாச) கோளாறுகள் ஏற்படும்.

விருட்ச வேதை: வீட்டிற்கு நேர் எதிரில் பட்டுப்போன மரம் போன்று பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால், அந்த இல்லத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு துயரம் ஏற்படும், வறுமையும், தீங்கும் ஏற்படும்

பங்க வேதை: இல்லத்தின் எதிரில் எப்போதும் சகதியும் சாக்கடை நீரும் தங்கி இருந்தால், அந்த இல்லத்தில் வசிப்போருக்கு துக்கம் ஏற்படும்.

ஸ்தம்ப வேதை: வீட்டின் தலைவாசலுக்கு நேர் எதிரில் கொடிக்கம்பம், மின் கம்பம், தொலைபேசி கம்பம் போன்றவை (வடகிழக்கு திசையில்) இருந்தால் கணவன், மனைவி பிரிவு ஏற்படும்; செல்வ அழிவும் உண்டு.

திக் வக்தர வேதை: வீட்டில் உள்ள வாசல்களும் ஜன்னல்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக இல்லாமல், மாறி வேறுபட்டு இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளும், கருச்சிதைவும், குழந்தைகளுக்குக் கேடான துன்பங்களும் ஏற்படும்.

விகட வேதை: வீட்டின் தலைவாசல் இல்லத்துக்கு ஏற்ப அகலம்  நீளம் சரியாக இருக்க வேண்டும். வாஸ்து விதிப்படி வாசல் அமையாவிடில், இல்லத் தலைவனுக்குஆயுள் குறைவு ஏற்படும்.

குலிச வேதை: இல்லத்தின் தலைவாயில் மற்றுமுள்ள வாயில்களின் கதவுகள் கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு பழுதாகி இருந்தால். இல்லத்தலைவன் ஆயுள் இழப்பான்.

உத்காடி தகவாட வேதை: இல்லத்தின் வாசல் கதவுகள் தானாகவே திறந்து கொள்ளுமாறு இருந்தால். அவ்வீட்டில் வசிக்கும் தலைவனுக்கு மன நிம்மதி இருக்காது.    

பிஹிதக வாட வேதை : இல்லத்தின் தலை வாசல் கதவு தானாகவே மூடிக்கொண்டால், அங்கு வசிக்கும் இல்லத் தலைவனின் குடிபிறப்பு பாழ் ஆகும்.

திக்பிராந்த த்வார வேதை: தலைவாசல் நேராக ஒரு திசை (கோண திசை கூடாது) நோக்கி இருந்தால், அந்த வீட்டில் திருடர்களால் தீங்கு நேரும்.

அந்தர்வினத த்வார வேதை: தலைவாசல் சரியாக அமைக்காமல் வீட்டின் உள்நோக்கிச் சாய்ந்திருந்தால், அந்த வீட்டில் வசிப்பர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பாஹ்யவிநத த்வார வேதை: வீட்டின் தலைவாசல் வெளிப்பகுதியை நோக்கிச் சாய்ந்து இருந்தால். அவ்வீட்டில் வசிக்கும் இல்லத்தலைவன் நாள்தோறும் வெளியூர் போய்க்கொண்டே இருப்பான்.

சிகாவிஹன வேதை: இல்லத்தின் தலைவாசல் பள்ளம் (அ) மிகத்தாழ்ந்தும் (அ) வளைந்து போயும் இருந்தால், இல்லத் தலைவனுக்கு அடிக்கடி நோய்த் தொல்லைகள் ஏற்படும்.

தாரு வேதை: பழைய வீட்டில் இருந்து பிரித்த மரங்கள், ஜன்னல்கள், நிலை, கதவு போன்றவற்றை புதிய வீட்டுக்குப் பயன்படுத்தினால், இல்லத் தலைவனுக்கு ஆயுள் குறையும். அவன் அந்த இல்லத்தில் தங்குவதும் அரிதாகிவிடும்.

பதிர வேதை: வீதியின் தரை மட்டத்துக்குக் கீழ், வீட்டின் தலைவாசல் படி அமைந்திருந்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் நோயாலும், ஏழ்மையினாலும் துன்பப்படுவர்.

தந்த வேதை: மலையை நோக்கி தலைவாயில் அமைந்தாலோ, இல்லத்தின் உச்சி மலையைப் போன்று வடிவம் பெற்றிருந்தாலோ... அந்த இல்லத்தில் வசிப்பவர்கள், சொல்லமுடியாத துக்கத்தில் சிக்கித் தவிப்பார்கள்.  

சங்கபாலக வேதை: தூண்கள் இல்லாத இல்லம் குற்றம் ஆகும். இல்லத்தில் தூண்கள் அமையாவிடினும், போர்டிகோவில் 2 தூண்கள் அமைப்பு வருவது போன்று கட்டுமானம் செய்யவேண்டும். அவ்வாறு இல்லையெனில், அது அச்சாணி இல்லாத இல்லமாகி, அங்கு வசிப்பவர்களுக்கு நிம்மதி பறிபோகும்.

திரிகோண வேதை: வீடு அமைய இருக்கும் நிலத்தின் வடிவம் முக்கோண வடிவமாக இருக்கக் கூடாது. அப்படியிருப்பின், அந்த வீட்டில் வசிக்கும் இல்லத் தலைவனுக்கு மனம், புத்தி பேதலிக்கும், ஏழ்மை நிலை ஏற்படும்

தடாக வேதை: வீட்டின் தெற்கு,தென் கிழக்கு வடமேற்கு பகுதிகளில் ஏரி, குளம், கிணறு, ஆழமான பள்ளத்தில் தேங்கிய நீர், நீர்நிலை தொட்டி ஆகியன இருந்தால், அந்த  வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவனுக்கு பல துன்பங்கள் வந்து சேரும்

நீச வேதை: இல்லத்தின் கிழக்கில், வடக்கில், வடகிழக்கு பகுதிகளில் சாணம், குப்பை போன்ற கழிவுகள் குவிந்து இருக்கக் கூடாது. அப்படி இருப்பின், அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கேடுகள் வந்து சேரும்.

கல்ப வேதை: வீட்டின் முற்றத்தில் பனை மரம் வளர்ந்து இருந்தால் பேய், பிசாசு, பூதங்கள் போன்ற தீய சக்திகளால் தொல்லை வரும். இடிதாக்குதலும் நிகழும்.

பட்சி வேதை: காகம், வௌவால் ஆகியன வீட்டில் எந்த இடத்தில் தங்கினாலும், அவ்வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு கேடு வரும். வசிப்பவர்களுக்கு மனக்கவலை கூடும். கழுகு, கோட்டான் போன்றவை வீட்டில் தங்கக்கூடாது.

பரஜல வேதை: அடுத்த வீட்டில் இருந்து மழைநீர், உபயோகித்த நீர் ஆகியன நம் இல்லத் துக்கு வருமானால், வீண் கலகம், எதிரிகளால் துன்பம், விஷ ஜந்துக்களால் அபாயம் ஏற்படும்.

கவாட வேதை: வீட்டின் தலைவாயில், கதவுகள், ஜன்னல்கள் ஆகியன கரையான் அரித்து இருந்தாலோ, கதவுகள் இல்லாமல் இருந்தாலோ, உடைந்து வலுவிழந்து இருந்தாலோ அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தாளாத துயரமும், செல்வ அழிவும், திருடர்களால் பயமும் ஏற்படும்.

காத வேதை: வீட்டுக்கு தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் குழி இருந்தால் கடன் பெருகும், மன அமைதி குறைவும். கால்நடை அழிவும் ஏற்படும்.

இன்னும் சில வேதைகள் உண்டு. அதுபற்றி அடுத்த இதழில் தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick