வல்லமை அருளும் வாலீஸ்வரர்!

பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் அழகுற அமைந்திருக்கிறது வாலிகண்டபுரம். இங்கு, ஆதியில் பிரம்மன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இங்குள்ள இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமமும், இறைவிக்கு பிரஹன்நாயகி என்றும், தீர்த்தத்துக்கு பிரம்மதீர்த்தம் என்றும், ஊருக்கு பிரம்மபுரி என்றும் பெயர் ஏற்பட்டது. 

வாலி இங்கு சிவபெருமானை தியானித்து தவமியற்றி, எதிராளியின் வலிமையில் சரிபாதியைப் பெறும் வரத்தைப் பெற்றான். வாலிக்கு சுயம்பு மூர்த்தமாகக் காட்சி அருளியதால், வாலீஸ்வரர் என்ற திருப்பெயருடனும் திகழ்கிறார் ஈசன். இங்குள்ள அம்பிகை துர்கையின் அம்சமாக, வாலாம்பிகைஎனும் திருப்பெயரும் கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈசனை வாலி வழிபட்டதால், இந்த ஊர் வாலிகொண்டபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே மருவி இன்றைக்கு வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது. வாலி வழிபட்டதற்குச் சாட்சியாக இந்தக் கோயிலில் பல இடங்களில் வாலி தொடர்பான சிற்பங்களைக் காணமுடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்