மனதுக்கும் மருந்தானவர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.தெய்வநாயகம்

'மருந்தே நம் வினைக்கு’ என்று திருவாய்மொழியில் பகவானைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். நம் உடம்புக்கு ஏற்படும் துன்பம் ரோகம்; உள்ளத்துக்கு ஏற்படும் துன்பம் சோகம். இந்த இரண்டு மட்டுமின்றி, ஜீவாத்மாக்களின் துன்பத்துக்குக் காரணமான பிறப்பு இறப்புக்கும் அருமருந்தாகத் திகழ்கிறான் இறைவன் என்பது பெரியோர் வாக்கு. அப்படி, நம் நோய் நீக்கும் அருமருந்தான பரம்பொருளின் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவரே ஸ்ரீதன்வந்திரி என்கின்றன ஞானநூல்கள்.

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது கற்பகவிருட்சம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, ஐராவதம் எனும் யானை முதலான பல பொக்கிஷங்கள் பாற்கடலில் தோன்றின. திருமகளும் வாருணிதேவியும்கூட பாற்கடலில் தோன்றியவர்களே! நிறைவாக,  ஒரு மூர்த்தி தோன்றினார். அவரே தன்வந்திரி பகவான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்