ஆண்டாள் மாலை!

க.சூர்யகோமதி, படங்கள்: ரா.ரகுநாதன்

''மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருளியிருக்கிறான் கண்ணன். மார்கழி மாதத்தின் சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தியவள் ஆண்டாள். இறைவனிடம் சரணாகதி அடைய வழி தேடிய ஆழ்வார் பெருமக்களில், மக்களையும் கடைத்தேற்றம் செய்யவேண்டும் என்பதற்காக அவதரித்தவள் ஆண்டாள். அவள் அருளிய திருப்பாவையின் நோக்கமே, 'வாயினால் பாடி மனதினால் சிந்தித்தல்’ என்பர். அவள் காட்டிய வழியில் மார்கழி நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் கிடைக்கும் அனுகூலங்கள் அளப்பரியன'' என்கிறார், வேதபிரான் பட்டர் சுதர்சன் பட்டாச்சார்யார். இவர், பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்தவர். 

ஸ்ரீஆண்டாளின் அர்ப்பண பாவனை, பக்தி முதிர்வு, கவித்துவப்பேறு அனைத்தும் வைணவத்துக்குக் கிடைத்த மகா பெருமை'' என்றவர், தொடர்ந்து ஆண்டாளின் மகிமை, திருப்பாவை நோன்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் மார்கழி வைபவங்கள் முதலான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது, ஆண்டாள் மாலை பற்றிய விவரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்