சக்தி சங்கமம்

முதலில் வரைந்த முருகன் படம்ஓவியர் பத்மவாசனுடன் வாசகர்கள் கலந்துரையாடல்...படங்கள்: ஆர்.யோகேஸ்வரன்

'ஆயிரம் வார்த்தைகளால் சொல்லமுடியாததை ஓர் ஓவியம் சொல்லிவிடும்’ என்பார்கள். அந்த அளவுக்கு உயர்வான ஒரு கலைஓவியக்கலை. ஓவியத்துக்குச் சித்திரம் என்றும் ஒரு பெயர் உண்டு. சித்திரத்துக்கு, 'அதிசயம்’, 'அழகு’, 'சிறப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. நம்முடைய சிந்தனையில் அழகுணர்ச்சியை ஏற்படுத்தி, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவதுடன், நம்முடைய சிந்தனையைச் செழுமைப்படுத்துவதில் ஓவியத்துக்கு நிகர் ஓவியம்தான். ஓவியக்கலைக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துக்கொண்டு, பெயரும் புகழும் பெற்று விளங்குபவர் ஓவியர் பத்மவாசன். 'சக்தி சங்கமம்’ நிகழ்ச்சிக்காக சக்திவிகடன் வாசகர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும், உடனே ஒப்புக்கொண்டதுடன், தனது ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்கே வாசகர்களை அழைத்துவந்துவிடும்படி தெரிவித்தார்.  

அதன்படி, வாசகர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த 'ஃபார்ச்சூன்’ ஓட்டலுக்குச் (பழைய சோழா ஓட்டல்) சென்றோம். நம்மை வரவேற்றவர், முதலில் வாசகர்களுக்கு கண்காட்சியைச் சுற்றிக் காண்பித்தார். பின்னர், பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், 'நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக,விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தலாம்’ என்று சொல்லியவர் மனதுக்குள், த்ரயம்பக மந்த்ரம் சொல்ல... வாசகர்களும் அவருடன் இணைந்து மெளன அஞ்சலி செலுத்தினர். பின்னர், உரையாடல் தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்