ஹலோ விகடன் - அருளோசை

ணக்கம், நான் அண்ணா சிங்காரவேலு பேசறேங்க! 

எப்பவுமே புரிதலைவிட தெளிதல் முக்கியமுங்க; எப்படீன்னு கேட்கறீங்களா?

ஒருவர் தினமும் கோயில்ல உபந்நியாசம் கேட்டுட்டு வீட்டுக்கு ரொம்ப லேட்டா வந்துட்டு இருந்தாரு. ஒருநாள் அவரோட மனைவி, ''அப்படி தினமும் உபந்நியாசத்துல என்னதான் சொன்னாங்க?''ன்னு கேட்க, ''என்ன சொன்னாங்கன்னு ஒண்ணுமே புரியல; ஆனா, நல்லா இருந்துச்சு''ன்னு சொன்னாராம் கணவர்.

கோபமான மனைவி, ''முதல்ல வீட்டுல இருக்கிற சல்லடையில கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க''ன்னாராம். கணவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுக்கச் சிந்தியபடியே வந்தாராம். மனைவியிடம் வந்தபோது, தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டும்தான் இருந்தது.

உடனே மனைவி, ''தினமும் லேட்டா வர்றீங்க. கேட்டா உபந்நியாசத்துக்குப் போனேங்கறீங்க. என்ன சொன்னாங்கன்னு கேட்டா, ஒண்ணும் தெரியலைங்கிறீங்க. நீங்க உபந்நியாசம் கேட்கப் போற லட்சணம், இதோ இந்தச் சல்லடையில் ஊத்துன தண்ணி மாதிரிதான். எதுக்கும் பிரயோஜனம் கிடையாது!''ன்னு சொன்னாங்களாம்.

அதுக்குக் கணவர் என்ன சொன்னார் தெரியுமா? ''நீ சொல்றது சரிதான்! சல்லடையில தண்ணி வேணா நிரப்ப முடியாம போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ சுத்தமாயிடுச்சு. அதுபோல, உபந்நியாசத்துல சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாம இருக்கலாம். ஆனா, என்னோட மனசுல இருக்கிற அழுக்கெல்லாம் படிப்படியா குறையறதை என்னால உணர முடியுது''ன்னு சொன்னாராம்.

இந்த மாதிரி குட்டிக் குட்டி கதைகள் மூலம் பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமா?

உடனே டயல் செய்யுங்களேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick