செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தும் குரு...

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி இந்த ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்ட வெளியில், பிரவஹம் எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்யசித்தாந்தம். காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான்! அதுமட்டுமா? கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான். 

இன்று ஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில்... அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனில் இருந்து 4வதாக இருப்பது சந்திரன். ஆகவே, மறுநாள் திங்கட்கிழமை. சந்திரனில் இருந்து 4வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர் களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப் படுகின்றனர். பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்து கொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர் நவக்கிரகங்கள். இவர்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற இறக்கத்தையும் நிகழ்த்துகின்றன என்று, கிரகங்கள் குறித்து ஜோதிடங்கள் விவரிக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்