சீமந்தம் எதற்காக...?

ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. 'உலகில் தோன்றிய முதல் நூல் ரிக் வேதம்’ என்று வெளி நாட்டவர்களும் பாராட்டுவார்கள். 'தேவ மாதா அதிதிக்கு சீமந்தம் செய்து அவளின் வம்சத்தை என்றும் சிரஞ்ஜீவியாக நிலை நிறுத்தினார் பிரஜாபதி. அதைப் போல் கர்ப்பமுற்ற என் மனைவிக்கு சீமந்தம் செய்து அவளின் பரம்பரையைச் செழிப்புடன் _ அதாவது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என்ற வரிசையில் அவள் குலத்தை சிரஞ்ஜீவி ஆக்குகிறேன்’ என்ற மந்திரம் ரிக் வேதத்தில் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ( யேனாதிதே: ஸீமானம் நயதி ப்ரஜாபதிர் மஹதே ஸெளபகாய ). 

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து அதன் இதயம், இன்ப துன்பங்களை அறியும் தன்மை யைப் பெற்றுவிடும். அவள் இதயத்துடன் குழந்தையின் இதயத்துக்குத் தொடர்பு இருக்கும். அவள் இரு இதயங்களைப் பெற்றவள் த்வி ஹ்ருதயாம்ச தௌர்ஹ்ரிதினீமாசக்ஷதே என்று ஆயுர்வேதம் கூறும். அவள் இதயத்தின் மூலம் குழந்தையின் இதயத்தைச் சுத்தப்படுத்த வேண் டும். அவளது எண்ணங்கள் குழந்தையின் மன தில் வேரூன்றிவிடும். ஆகையால், அவளின் மன நிறைவு, குழந்தையிடம் மன நிறைவை ஏற் படுத்தும் என்ற தகவலை ஆயுர்வேத அறிஞர் சுஸ்ருதரின் நூலில் காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்