திருச்செந்தூரும் குரு பகவானும் !

குரு குஹ சரணம் !திண்டுக்கல் கே.எம்.முருகேசன்

தேவகுரு என்றும் பிரகஸ்பதி என்றும் போற்றப்படும் குரு பகவான் ஒருமுறை, மனக்கலக்கத்துடன் கானகத்தின் வழியே நடந்து வந்துகொண்டு இருந்தார். அவரது மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. 

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். விளைவு, தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. தேவர்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகிறான். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்