ஆத்திக்குளம் திருக்கோயில் கும்பாபிஷேகம் !

நல்லது நடந்தது !இளந்தமிழருவி

ஞ்சை மாவட்டத்தில், காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆத்திக்குளம் என்னும் அழகிய கிராமம். ஊரின் மேற்கு எல்லையில் பூர்ணா புஷ்கலா சமேத ஐயனாரும், கிழக்கு எல்லையில் பிடாரி அம்மனும் காவல் தெய்வமாகத் திகழும் தொன்மை வாய்ந்த இந்த ஆலயமானது மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் இருந்ததைப் பற்றி, கடந்த 24.6.14 சக்தி விகடன் இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். 

ஊருக்கு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்குமே காவல் தெய்வமாக, காக்கும் கடவுளாகத் திகழும் ஐயனாரின் மகிமையைக் குறித்தும், ஆலயத்தின் நிலையையும், திருப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம். கட்டுரையைப் படித்த சக்தி விகடன் வாசகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்க, திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, அண்மையில் கடந்த 2.6.15 அன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்