தேடி வந்தாள்...கோயில் கொண்டாள் !

திரிசூல வடிவில் அம்மன் தரிசனம் !எஸ்.பாரதி

ண்ணுலகைத் தழைக்கச் செய்யவேண்டும் என்ற திருவுள்ளத்தின்பேரில் அன்னை ஆதிசக்தி அவ்வப்போது இந்த உலகத்தில், இன்ன வடிவில்தான் என்றில்லாமல் எண்ணற்ற பல வடிவங்களில் தோன்றுவது உண்டு. ஆனால், அப்படி நேரில் தோன்றும் தெய்வத்தைப் பலரும் புரிந்துகொள்வது இல்லை. அப்படித்தான், தண்பொருநை தவழ்ந்தோடும் திருநெல்வேலி நகரத்தில் இருந்து பேட்டை வழியாக சுமார் 10 கி.மீ. சென்றால் வரும் திருப்பணிக்கரிசல்குளம் என்ற ஊரிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பெரும் காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த ஒரு கருக்கல் பொழுதில், அன்னை ஆதிசக்தி அக்கினிமாரி, அனல் மாரி என்ற திருப்பெயர்களுடன் இரண்டு சிறு பெண்களாக உருவம் கொண்டு, திருப்பணிக் கரிசல்குளம் ஊரில் இருந்த வடுகர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்