கூத்தூரில் அருள்புரியும் கொட்டூர் மாரியம்மன் !

மண் கூட்டில் மகமாயி...இ.ராஜவிபீஷிகா

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, வாகன வசதிகள் அதிகம் இல்லாத காலம். கூத்தூரைச் சேர்ந்த ஒரு பெரியவர், பசுமாடு வாங்குவதற்காக வைத்தீஸ்வரன்கோவில் வழியாக பேரளத்துக்கு நடைப்பயணமாகச் சென்றிருக்கிறார். அப்படிச் செல்லும்போது, வயதின் காரணமாக அசதி ஏற்படவே, எதிர்ப்பட்ட கொட்டூர் என்ற கிராமத்தில் இருந்த ஒரு கல்மண்டபத்தில் ஓய்வு எடுக்க நினைத்து, சற்றே கண்ணயர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு கனவு! 

கனவில், தெய்விகக் களையுடன் தோன்றிய பெண்ணொருத்தி, ''நான் உன் ஊருக்கு வர விரும்புகிறேன். என்னையும் உன்னோடு அழைத்துச் செல்!'' என்று கூறினாள். கனவுதான் என்று நம்பமுடியாதபடி மிகத் தத்ரூபமாகத் தெரிந்த அந்தக் காட்சியால் வியர்த்து விறுவிறுத்து எழுந்த அந்தப் பெரியவர், அப்போதுதான் தான் படுத்துக்கொண்டு இருப்பது ஒரு கோயில் மண்டபம் என்று அறிந்து, மெய்சிலிர்த்துப் போனார். அவர் கண்ணயர்ந்த அந்தக் கோயில்தான், கொட்டூர் மாரியம்மன் கோயில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்