சஷ்டி கவசம்... மாமாங்க தீர்த்தம் !

சிரகிரி முருகா சரணம் !கட்டுரை, படங்கள்: பா.குமரேசன்

ரோடு மாவட்டத்தில் உள்ள மிக அற்புதமான முருக க்ஷேத்திரம் சென்னிமலை. முருகப் பெருமானுக்கு மிக உகந்த ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம் இது. சோழ மன்னன் ஒருவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, முருகப்பெருமான் அர்ச்சகராக வந்திருந்து, தம்மைத் தாமே பூஜித்து அருளிய பெருமைக்கும் உரியது இந்தத் தலம். சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இங்குள்ள கோயில், சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது. 

சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கொடுமணல். முன்பொரு காலத்தில் இங்கு வாழ்ந்த செல்வந்தர் ஒருவரிடம் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று சரியாகப் பால் கரக்கவில்லை. என்ன ஏதுவென்று கண்காணிக்கத் துவங்கிய செல்வந்தர், ஒருநாள் ஓர் அதிசயத்தைக் கண்டார். குறிப்பிட்ட ஓரிடத்துக்குச் சென்ற பசு, தானாகப் பால் சொரிய ஆரம்பித்தது. செல்வந்தர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, அழகே உருவான முருக விக்கிரஹம் ஒன்று கிடைத்தது. அந்த விக்கிரகம் இடுப்புக்கு மேலே நேர்த்தியாகவும், கீழ்ப் பகுதி பூர்த்தியாகாமலும் இருந்ததைக் கண்ட செல்வந்தர், அதைச் சீர்செய்ய முயன்றபோது, விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீறிட ஆரம்பித்தது. எனவே, முயற்சியைக் கைவிட்டுவிட்டு, ஸ்வாமியின் விக்கிரஹத்தை அப்படியே எடுத்துச் சென்று, அருகிலுள்ள சென்னிமலையில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலவரலாறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்