சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் !

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பெண் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7ம் வீட்டில் சூரியன் இருக்க, அந்தச் சூரியனை லக்னத்தில் வீற்றிருக்கும் ஒரு பாப கிரகம் 7ம் பார்வையாகப் பார்க்கும் நிலையில், திருமணத்துக்குப் பிறகு, அவளின் கணவன் அவளை ஒதுக்கிவிடுவான் என்கிறது ஜோதிடம் (உத்ஸ்ருஷ்டாதரணெள). 

தட்ப கிரகங்கள், அதாவது சுப கிரகங்கள் அனைத்தும், தாம் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டை முழுமை யாகப் பார்க்கும். குரு மட்டுமே, தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் வீட்டையும் 9ம் வீட்டையும் முழுப் பார்வை பார்ப்பார். 7ல் எல்லோருக்கும் போல் அவருக்கும் முழுப் பார்வை உண்டு. அதிகப்படியாக 5 மற்றும் 7ம் பார்வையும் முழுமை பெற்றதாக இருக்கும். வெப்ப கிரகங்களுக்கும், அதாவது அசுப கிரகங்களுக்கும் 7ல் பார்வை (முழுமையாக) உண்டு. செவ்வாய்க்கு 7ம் சேர்த்து நான்கிலும் எட்டிலும் முழுப்பார்வை உண்டு. சனிக்கு, 7ஐ தவிர 3 மற்றும் 10ல் முழுப்பார்வை உண்டு. இங்கெல்லாம் பார்வை என்று சொன்னால், எல்லா கிரகங்களுக்கும் பொதுவான 7ம் பார்வையைக் குறிக்கும். விசேஷ பார்வைகளை ஒதுக்கிவிட்டு, பொதுவான 7ம் பார்வையைச் சொல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்