பன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும் !

குரு பலம் வேண்டும் மேஷ ராசிக்காரர்கள், ஆலங்குடிக்குச் சென்று தரிசிக்க லாம். ரிஷப ராசிக்காரர்கள் தரிசிக்க வேண்டிய தலம், தென்குடித் திட்டை; மிதுனம்  தக்கோலம்; கடகம்  இலம்பயங்கோட்டூர்; சிம்மம்  திருப்புலிவனம்; கன்னி  பாடி (சென்னை); துலாம்  சுருட்டப்பள்ளி; விருச்சிகம்  புளியரை (தென்காசிக்கு அருகில்); தனுசு  உத்தமர்கோவில்; மகரம்  கோவிந்தவாடி அகரம்; கும்பம்  திருவொற்றியூர்; மீனம்  மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்).

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக்கிழமைகளில், தங்களுக்கு உரிய இந்தத் தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சித்து வழிபட, சகல நலன்களும் உண்டாகும். குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.

குரு பலம் வேண்டுமா?

ஜாதகத்தில் குரு பலம் குறைபாடுள்ள அன்பர்கள், வியாழக்கிழமைதோறும் பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவு, மஞ்சள் பொடி கலந்து அருகிலுள்ள கோலத்தைப் போட்டு, குருபகவானை கீழ்க்காணும் துதிப்பாடலைச் சொல்லி வழிபட்டு வரம் பெறலாம். திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை        

                                                                                             வெல்வாம்.

  திண்டுக்கல் கே.எம்.முருகேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick