166-வது திருவிளக்கு பூஜை

‘தீபத்தால் ஒளிரட்டும் நம் தேசம் !’ இளந்தமிழருவி

'இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கவேண்டும் என்பதற்காக மட்டும் இல்லாமல், நம்முடைய வீடு விளக்கம் பெறவேண்டும் என்பதற்காகவும்தான் வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடுகின்றோம். நம் அகத்திலும் புறத்திலும் உள்ள அறியாமை, இல்லாமை போன்ற இருள் விலகவேண்டும் என்கிற உயரிய நோக்கத் தில்தான் திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது. 

இந்தத் தீப வழிபாட்டில் நம் வேண்டுதல்களைச் சொல்லி, 'அருள் தா’ என வேண்டினால், நிச்சயம் அது பலிக்கும்.  அதுவும், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக இந்தத் திருவிளக்கு பூஜையைச் செய்வதன்மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் மிக அதிகம். நாம் எல்லாம் ஒன்றுகூடி உள்ள இந்த இனிய தருணத் தில், நமக்கு என்பதைத் தவிர்த்து, நமது தேசத்துக்காக இந்தத் திருவிளக்கு பூஜையில் பிரார்த்திப்போம். இதனால், நம் தேசம் மட்டுமல்ல, நம் வீடும் நலம் பெறும்'' என, சிறப்பு விருந்தினர் புலவர் மு.இராசரத்தினம் பேசியதை வாசகியர் ஆமோதித்து வரவேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்