தன்னையே வெல்லும் நம்பிக்கை !

இளந்தமிழருவி

'உடலை உருவாக்கக்கூடிய அடிப்படையான சக்திக்குப் பெயர்தான் ஈஷா. யோகா என்றால், முழு ஈடுபாட்டுடன் ஒன்றியிருத்தல், செயல்படுதல் ஆகும். பொருள் உடல், மன உடல் போல, சக்தி உடலும் நமக்குள் உண்டு. இதில், உடல் வெளிநோக்கிச் செயல்பட்டால், நன்மையும் வரும்; சிக்கலும் வரும். இதில், கிரியா யோகா என்பது, நமக்குள்ளிருந்து வெளிப்படும் உணர்வு, உணர்ச்சிகள், கோப தாபம், சுக துக்கம் போன்ற எதற்கும் இடமளிக்காமல், உடலை உள்நோக்கிச் செயல்படுத்துவதாகும். 

இந்த ஈஷா கிரியா என்பது, உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரவல்லது. அதோடு சேர்த்து ஓரளவு ஆன்மிகமும் அடங்கிய மிக எளிமையான பயிற்சி இது. முயற்சி, எண்ணம், விழிப்பு உணர்வு மூன்றும் சேர்ந்தால், இந்த கிரியா யோகா பயிற்சி மிக மிக எளிது' என்று திரையில் சத்குரு தோன்றி, யோகா குறித்து முன்னுரை கொடுத்ததும், வந்திருந்த வாசகர்கள் அனைவரும் பரவசமானார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்