காசியில்... காஞ்சி மஹா ஸ்வாமிகளின் 122-வது ஜயந்தி மஹோத்ஸவம்

றைவனின் மூச்சுக் காற்றான வேதத்தையும், வேத தர்மத்தையும் புனருத்தாரணம் செய் வதையே தமது அவதார நோக்கமாக ஏற்று வாழ்ந்த பூஜ்யஸ்ரீ  சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள், பாமர மக்களோடு அளவளாவிய நடமாடும் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவர். 

உலக நன்மைக்காகவும், கோயில்களின் புனிதத் தன்மையைக் காப்பாற்றவும், தென்னிந்தியாவில் நான்கு ராஜ கோபுரங்கள் அமைந்த திருக்கோயில்களில், உற்ஸவ காலங்களில், வேத வாக்கியங்களை ஜடை பின்னுவதுபோல் தொகுத்துப் பாராயணம் செய்யும் முறையை வேத விற்பன்னர்கள் மூலம் நடைமுறைப் படுத்தினார் அவர். இதோ, ஸ்ரீ மகாபெரியவாளின் 122வது ஜயந்தி மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ஸ்ரீ விஸ்வேச்வர ராஜதானியான காசி திருத்தலத்தில், உத்தரவாகினியும் மிகப் புனிதம் மிக்கதுமான கங்கையின் கரையில், ஜூன் 2ம் தேதி துவங்கி, யஜுர் வேத ஜடா பாராயணம் மற்றும் சம்ஹிதைமூல பாராயணம் ஆகியவை மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்