தாமிரபரணி மகாத்மியம் - 5

எஸ்.கண்ணகோபாலன்

ண்பொருநை தவழ்ந்தோடும் வழியெங்கும் எத்தனை எத்தனை திருத்தலங்கள்..! அந்தத் திருத்தலங்களில்தான் எத்தனை எத்தனை அற்புதங்கள்! 

நெல்லை மாவட்டம், சொரிமுத் தையனார் கோயிலில் இருந்து புறப்பட்ட நாம் அடுத்துச் சென்றது, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரி திருத்தலத்துக்கு. இந்தத் திருத்தலத்தில்தான் நம்மாழ்வார் அவதரித்தார். விஷ்வக்சேனரின் அம்சமாக காரிஉடையநங்கை தம்பதிக்குப் பிறந்த குழந்தை, பிறந்ததில் இருந்தே பால் உண்ணாமலும், அழவோ சிரிக்கவோ செய்யாமலும் ஜடம் போல் இருந்ததால், பெற்றவர்கள் அதைக் கொண்டு போய், ஆதிநாதர் கோயிலில் இருந்த ஒரு புளியமர பொந்தில் வைத்துவிட்டு வந்துவிட்டனர். அங்கேயே வளர்ந்து வந்த அந்தக் குழந்தைதான் நம்மாழ்வார். அவர் இருந்த அந்தப் புளியமரமே 'உறங்காப்புளி’ என்ற பெயரில் இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக இன்றைக்கும் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்