வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!

நல்லது நடந்தது

கான்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபடும் ஆலயங்களைக் காட்டிலும், இறைவன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலங்கள் அதிக மகத்துவம் கொண்டவை. அப்படி இறைவன் சுயம்புவாகத் தோன்றிய ஆலயம்தான் எச்சூர் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம். வாலி வழிபட்ட இந்த ஆலயம் ஒருகாலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியது. காலப்போக்கில் சிதிலம் அடைந்திருந்த இந்தக் கோயிலைப் பற்றி, 22.7.14 தேதியிட்ட சக்தி விகடனில் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் விரிவாக எழுதி இருந்தோம்.

ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்ட அந்த ஆலயம் பற்றிய கட்டுரையைப் படித்ததுமே, சக்தி விகடன் வாசக அன்பர்கள் பலரும் நிதியுதவி செய்து, திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதுவரை வறண்ட பூமியாக இருந்த அந்த ஊரில், கோயில் திருப்பணிகள் தொடங்கியதுமே மழை பெய்யத் தொடங்கி ஊர் செழித்ததால், மனம் குளிர்ந்த ஊர்மக்கள் மிகவும் உற்சாகமாகத் தங்களை திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்