முன்னோருக்கு நற்கதி அருளும் வல்வில் ராமன்!

ராமா... ஸ்ரீராமா!

ஞ்சை மாவட்டம், சுவாமிமலைக்கு அருகில் உள்ளது, திருப் புள்ளப்பூதங்குடி. ‘புள்’ என்றால் பறவை. பறவை அரசனாகிய ஜடாயுவுக்கு மோட்சகதி அருளிய ராமன் அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் இது. மூலவர் ராமன், சக்ரவர்த்தித் திருமகனாக தெற்கில் தலைவைத்து  சயனத் திருக்கோலத்தில் அருள, உற்ஸவர் வல்வில்ராமனாக நான்கு திருக்கரங்களுடன் சேவைசாதிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. வல்வில் என்றால் வலிமையான வில்லை உடைய ராமன் என்று பொருள். தாயாரும் இங்கு விசேஷம். ‘பொற் றாமரையாள்’ எனும் திருநாமத்துடன் பூமா தேவியே இங்கு தாயாராக அருள்வது, வெகு விசேஷம் என்கிறார்கள்.


சீதாவைத் தேடி வந்த ராமன், குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் காண்கிறார். சீதாவை ராவணன் கவர்ந்து செல்லும் தகவலை ராமனிடம் சொல்லிவிட்டு, அவருடைய மடியிலேயே உயிர்விடுகிறார் ஜடாயு.அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய, மனைவியும் உடனிருத்தல் அவசியம். ராமன் சீதாதேவியை மனதால் நினைக்க, பூமிபிராட்டியே இங்கே ‘ஹேமாம்புஜவல்லி’ (பொற்றாமரையாள்) தாயாராக எழுந்தருளினாராம். பிறகு, அருகிலிருந்த புன்னை மரத்தடியில் அமர்ந்து சிரம்பரிகாரம் செய்துகொண்டு, சடங்குகளை முடித்து ஜடாயுவுக்கு முக்தியளித்தார் ராமபிரான். இன்றைக்கும் மிகப் பழைமையான் புன்னை மரத்தை இந்தக் கோயிலில் தரிசிக்கலாம்! திருமங்கையாழ்வார் இவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, நான்கு கரங்களுடன் திகழும் ராமனை வேறு ஏதோ தெய்வம் என்று எண்ணி, கவனிக்காமல் சென்றாராம். அப்போது, பெரும் ஒளிவெள்ளத்துடன் ஆழ்வா ருக்குக் காட்சி தந்து, தான் யார் என்பதை உணர்த்தினாராம் ஸ்ரீராமன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்