ஆலயம் தேடுவோம்

பொக்கிஷநாதர்!

யன் ஈசன் உலக மக்களின் நன்மைக்காக எத்தனையோ அருளாடல்களை நிகழ்த்தி இருக்கிறார். அவை எல்லாமே மனிதர்களுக்குப் படிப்பினை தருவதாகவும், அவர்களுடைய வாழ்க்கையில் வளம் சேர்ப்பதாகவுமே அமைந்துள்ளன. அருளாடல்களை நிகழ்த்தி, நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்தும் சிவனாருக்கு நமது புண்ணிய பூமியில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. குறிப்பாக, நம் தமிழகத்தில்தான் ஐயனுக்கு எத்தனை எத்தனை ஆலயங்கள்?! அதனால்தானோ என்னவோ எம் ஐயன், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ என்று போற்றப்படுகிறார் போலும்!

தென்னாடுடைய சிவனாரின் ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், காலப்போக்கில் எத்தனையோ ஆலயங்கள் பல்வேறு காரணங்களால் கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடைந்திருக்கும் அவல நிலையையும் காண முடிகிறது. இப்போது நாம் தரிசிக்க இருக்கும் தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷநாதர் திருக்கோயில், அப்படியான அவல நிலையில் உள்ள ஓர் ஆலயம்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்