ராசிபலன்

’ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்மார்ச் 17 முதல் 30 வரை

புரட்சிகரமான சிந்தனை உடைய நீங்கள், தனக்கொரு துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். 21-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும்.  பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரிக்கு திருமணம் முடியும்.


21-ம் தேதி முதல், புதன் ராசிக்கு 12-ல் மறைவதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். கேதுவும், சூரியனும் 12-ல் நிற்பதால், தூக்கமின்மை, டென்ஷன், தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வ தால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னை கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் நிதானமாகப் பழகுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்