மகளிர் தினத்தில் மங்கல திருவிழா!

தேனி விழாவில் வாசகியர் நெகிழ்ச்சி வி.ராம்ஜி, இளந்தமிழருவி

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள என்.ஆர்.டி. மஹாலில், மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று சீரும் சிறப்புமாக, சந்தோஷமும் குதூகலமுமாக நடந்தேறியது சக்தி விகடனும் அவள் விகடனும் இணைந்து நடத்திய மங்கலத் திருவிழா!

‘‘மகளிர் தினத்தில் சக்திவிகடன் நடத்தும் மங்கலத் திருவிழா... அதுவும் எங்கள் தேனியில் என்றவுடன், தலைகால் புரிய வில்லை எங்களுக்கு. போதாக்குறைக்கு, தேனியில் திரும்பும் இடமெல்லாம் பேனர்கள், போஸ்டர்கள்! அவ்வளவு ஏன்... ஆட்டோவில் எங்கள் தெருவுக்கே வந்து, விழா பற்றிய தகவலைத் தெரிவித்த சக்திவிகடனை எப்படிப் பாராட்டினாலும் தகும்!’’ என்று நெகிழ்ந்து பரவசமானார்கள் தேனி வாசகிகள். முத்தாய்ப்பாக, முதல் நாள் சனிக்கிழமை அன்றே வந்து, மஹாலைக் கழுவி, சுத்தம் செய்து, கோலமிட்டு, வாசலில் வாழைமரம், உள்ளே மாவிலைத் தோரணங்கள் எனக் கட்டி, அந்த இடத்தை அழகுபடுத்தி, அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் இடமாக்கிவிட்டார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்