கண்டமனூரில் கள்ளழகர் !

ம.மாரிமுத்து

துரை மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, அழகர் கோயில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு எழுந்தருளும் வைபவம் குறித்து நமக்கெல்லாம் தெரியும். அதேபோல், கண்டமனூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரங்க நாத பெருமாளும் வருஷம்தோறும் கள்ளழகர் வேடம் பூண்டு, ஆற்றில் இறங்குகிறார். 

சுமார் 300 வருஷங்களுக்கு முன், ஜமீனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த 64 கிராமங்களுக்குத் தலைமையிடமாக இருந்தது கண்டமனூர். திருமலை நாயக்கர் காலத்தில், ஆந்திரத்தில் இருந்து பெருமளவு மக்கள் இங்கே குடியேறினர். தீவிர வைஷ்ணவர்களாக இருந்த அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவின்போது, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைத் தவறாமல் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனப் பகுதியாக இருந்தபடியால், மதுரைக்குச் செல்வது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, கள்ளழகர் கோயிலைப் போலவே தங்கள் ஊரிலும் ஒரு கோயிலைக் கட்டி, அங்கே ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்