வசந்த விழா !

சித்திரை, வைகாசி மாதங்களில் வசந்த கொண்டாட்டம் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் திருவிழாவாகும். பெரிய ஆலயங்களில் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் இதற்கெனவே வசந்த மண்டபம் கட்டி வைத்திருக்கிறார்கள். 

பெரும்பாலும் தோட்டத்தின் நடுவே உயர்வாக 16 கால் மண்டபமாக, ஸ்ரீ விமானத்துடன் இது திகழும். சுற்றிலும் அகழி போல் அமைத்து, அதில் நீரைத் தேக்கிவைத்து நீர்ப் பூக்களை இட்டுவைத்திருப்பார்கள். விழாவையொட்டி மண்டபத்தை சுற்றிலும் வெட்டிவேர் தட்டியால் தடுப்பு அமைத்திருப்பார்கள். அந்த இடமே குளிர்ச்சியாகத் திகழும். வசந்த விழாவின் இறை ஆராதனைகள் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும். வெள்ளரிப் பிஞ்சு, நீர்மோர், பானகம், தயிர்சாதம் முதலியன ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும். கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் விழாவாகவே இது கொண்டாடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்