பணிவுடன் இரு ; பார்ப்பவற்றை வணங்கு !

அனுபவம் என்பது...சுபா

னது இருபத்தெட்டாவது வயதில் என்னைப் பெற்றுச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாது போனது. காலுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏதோ ஒன்றில் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் அடைப்பு ஏற்பட்டு, வலது கால் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக்கொண்டே வந்தது. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அவளோடு அலைந்துகொண்டிருந்தேன். 

'நீ ரெண்டரை வயசுக் கொழந்தையா இருந்தப்ப கும்பகோணத்திலேர்ந்து திருவிசநல்லூர், சுவாமி மலைன்னு ஒன்னை நடத்தியே கூட்டிட்டுப் போய் வந்திருக்கேன். அந்தப் பாவம்தான் என்னை இப்படிப் படுத்தி எடுக்குதோ என்னவோ..' என்று, ஆஸ்பத்திரிக்கட்டிலில் வலியால் உண்டான முகச்சுழிவுடன் படுத்திருந்த, அம்மா சீரியஸாகவும், விளையாட்டாகவும் கூறினாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்