ஹலோ விகடன் - அருளோசை

ணக்கம்! 

இரவு பகற் பலகாலும் இயல்இசைமுத் தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா அரன்அருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

** மேன்மையான கருணை பொருந்திய பெருவாழ்வே! சிவமயமான ஞானப் பொருளே! சிவபிரான் அருளிய புதல்வனே! இரவு பகல் பாராது எப்பொழுதும் முத்தமிழால் உன்னைப் போற்ற வேண்டும்! எது நிலையான பொருளோ அதை நீ எனக்குத் தெளிவாக விளக்கியருள்வாயாக! சோதி வடிவமான அண்ணாமலையில் அருளும் செவ்வேளே! உன் திருவருளைத் தருவாயாக.

** திருமுருகனின்  திருப்புகழை பாரெங்கும் பரவச் செய்தவர் அருணகிரிநாதர். கார்த்திகை மாதத்தில் நம் கார்த்திகேயனின் திருப்புகழ் பாமாலையை, தினம் ஒரு திருமந்திரமாய் கேட்டு நாம் இன்புறுவோமே!

10.11.15 முதல் 23.11.15 வரை முருகப் பெருமானின் மகிமையை கேட்டுப் பயன்பெறுங்கள்!

அன்புடன்,

பவ்யா ஹரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick