அமெரிக்காவில் அருளும் அங்கயற்கண்ணி!

திரை கடல் தாண்டி...

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்றார் ஒளவையார். அதன்படி, வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், தாங்கள் குடியேறிய பகுதிகளில் இந்துக் கடவுளருக்கு ஆலயங்களும் அமைத்தனர். 

அந்த வகையில் அமைந்த ஒரு கோயில்தான் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹோஸ் டான் சிட்டிக்கு அருகில் உள்ள பியர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள மீனாக்ஷி சமேத சுந்தரேஸ் வரர் ஆலயம். அமெரிக்க வாழ் தமிழர்களால் நிதி திரட்டப்பட்டு, 1970ம் ஆண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.

மீனாக்ஷியும் சுந்தரேஸ்வரரும் பிரதானமாகத் திகழும் இந்தக் கோயிலில், மகாவிஷ்ணுவும் ஸ்ரீவேங்கடேஸ்வரராக அருட்காட்சி தருகிறார். மேலும் விநாயகர், முருகன், ஐயப்பன், கன்னிகா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர், நடராஜர் ஆகியோருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஐம்பொன் வேலைப்பாடுடன் கூடிய கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளன.

நடை திறந்திருக்கும் நேரம் (அமெரிக்க  நேரப்படி)

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும்; வார விடுமுறை மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

தகவல், படங்கள்: தி.வேல்முருகன்


எப்படிச் செல்வது? அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாணத்தில் உள்ள ஹோஸ்டான் சிட்டியில் இருந்து சுமார் 22 கி.மீ காரில் பயணித்து, பியர் லேண்ட்டிலுள்ள இத்திருத்தலத்தை அடையலாம்.

முகவரி: ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில், 17130, மேக்லேன் சாலை, பியர் லேண்ட் (McLean Road, Pearland)  ஹோஸ்டான் சிட்டி அருகில், டெக்ஸாஸ் 77584.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick