இரண்டு விரல் காட்டும் பெருமாள்!

பெருமாளுக்கு திருஷ்டி!  

ஸ்ரீ ரங்கநாதரின் அழகை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்ணார தரிசிப்ப தால் அவருக்குக் கண்திருஷ்டி ஏற்பட்டுவிடுமா என்ன? ஏற்படாது என்றாலும், அன்பின் காரணமாக இச்சடங்கு திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் செய்யப்படுகிறது. ஐந்தாவது பிராகாரத்திலுள்ள நாலுகால் மண்டபத்தில் இச்சடங்கு நடத்தப்படும். ஒரு சிறிய குடத்தின் மேல் கிண்ணம் ஒன்றை வைத்து, அதில் கனமான திரியிட்டுத் தீபமேற்றி பெருமாளுக்குக் காட்டுவர். இந்தச் சடங்குக்கு 'திருவந்திக்காப்பு’ எனப் பெயர்.

இரண்டு விரல் காட்டும் பெருமாள்!

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், பெருமாள் இரண்டு விரல் களைக் காட்டியபடி காட்சி தருகிறார். ஏன் தெரியுமா?

''மகாபலியே, நான் இரண்டடி நிலம் அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' எனக் கேட்கிறாராம் பெருமாள். இதுபோன்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் பெருமாள் திருக் கோலத்தை வேறெங்கும் காண்பது அரிது! 

ஒன்பது மூலவர்கள்!

காஞ்சிபுரம் அருகில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் உலகப்பிரசித்திப் பெற்றவை. இவ்வூரில் உள்ள அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக்கோயிலில், ஒன்பது மூலவர்கள் தனித்தனிச் சந்நிதி களில் அருள்புரிகின்றனர்!

மோகினி அவதார பெருமாள்!

கோவா மாநிலம், மர்டேல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கேஷ் என்ற ஆலயத்தில், மோகினி அவதாரத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

தினமும் கருட சேவை!

கோயில்களில் பெருமாள் நின்றும், இருந்தும், சயனித்தும் காட்சி தருவதை நாம் தரிசித்திருப்போம். விழாக் காலங்களில் மட்டுமே பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவார். ஆனால், தஞ்சாவூர்திருவாரூர் சாலையில், முகுந்தனூர் அருகில் உள்ள எண்கண் என்ற தலத்தில் உள்ள ஆதி நாராயணப் பெருமாள், கருடன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அந்த வகையில், இந்தக் கோயிலில் தினமும் கருட சேவைதான்.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick