ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்!

குஜராத் மாநிலம், போர்பந்தரில் குசேலர் ஆலயம் அமைந்துள்ளது. இதை சுதாமா கோயில் என்கின்றனர். கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில், குசேலர் அன்புடன் தரும் அவலை கிருஷ்ணர் உண்ணும் காட்சியும் உள்ளது. 

இடது கை இடுப்பில் தாங்கி நிற்க, வலது கையில் சாட்டையுடன், வலது காலை ஒரு மேட்டிலும், இடதுகாலை பள்ளத்திலுமாக வைத்தபடி, சிறிய பால்குடம் ஒன்றை சுமந்திருக்கும் சிரத்தை சற்றே வலப்புறமாக சாய்த்தபடி அழகு தரிசனம் தரும் கிருஷ்ணனை, சென்னைக்கு அருகில் பொன்னேரியிலுள்ள கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் மூலவராகத் தரிசிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்