முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்தவேளை (லக்னம்) கன்னி ராசி. அதற்கு 7ம்  இடம் மீன ராசி. அதில் சனி அமர்ந்தி ருக்கிறான். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால், தாம்பத்தியம் நெருடலைச் சந்திக்கும் என்கிறது ஜோதிடம் (உதாரணம்: 1). 

சனி வெப்ப கிரகம். அவன் 7ல் இருப்பதால் எதிரிடையான பலனை ஏற்படுத்துவான். அவன் 7ல் அமர்ந்து, ஏழாம் பார்வையாக (முழுப் பார்வை) லக்னத்தைப் பார்க்கிறான். ஆக, லக்னத்தின் அனுபவத்தைச் சுவைப்பதில் இடையூறு ஏற்படுத்துகிறான். அந்த சனி 5 மற்றும் 6க்கு உடையவன். 5  கர்மவினை; 6ல் எதிரிடை யான பலத்தை அளிப்பவன். 6க்கு உடையவனாக இருந்து, 7ல் அமர்ந்து லக்னத்தில் பார்வையைச் செலுத்தி, ஜாதகனின் கர்மவினையை (தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியின்மை) நடை முறைபடுத்துகிறான். 7க்கு உடையவன் குருவாக இருந்தும் நல்லதை எட்ட முடியவில்லை. 6க்கு உடையவன் 7ல் அமர்ந்திருக்கும் நிலையானது, முந்திக்கொண்டு விபரீத பலனை அளித்து விடுகிறது. இங்கு ஜாதகனின் (புருஷன்) குறை சுட்டிக் காட்டப்படுகிறது. அவனது ஜாதகத்தில் 6க்கு உடையவன், 7ல் அமர்ந்து செயல்பட்டான். ஆகவே, சுகமின்மைக்கு மனைவியை குறை சொல்ல இயலாது. நல்ல அமைதி கிடைத்தும் தனது கர்மவினை அனுபவிக்க முடியாமல் தடுத்துவிட்டது என்று ஜோதிடம் விளக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்