சித்தமெல்லாம் சித்தமல்லி - 6!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விடிந்தும் விடியாத அந்தக் கருக்கல் பொழுதில் வெற்றிலைச் சாற்றைத் துப்ப வந்த சுந்தரநாராயணன், 'என் மீதா துப்பப் பார்க்கிறாய்?’ என்று ஒரு மங்கலான உருவம் அதட்டலாகக் கேட்டதும், அப்படியே திடுக்கிட்டு சிலையாகிப் போனார். மங்கலாகத் தெரிந்த அந்த உருவம் உயிரும் உணர்வும் கொண்டு தன் முன் நிற்கிறதா, அல்லது தன்னுடைய மன பிரமையா என்று புரியவில்லை அவருக்கு. சில விநாடிகளில் ஒருவாறு சுதாரித்துக்கொண்ட சுந்தரநாராயணன், காவியுடை உடுத்தி, கையில் கமண்டலமும் தண்டமும் ஏந்தியபடி நின்றிருந்த அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தார். 

பார்க்கப் பார்க்க அந்த உருவம் யாரெனப் புரிந்துபோனது அவருக்கு. ஆம்... அங்கே அவர் கண்டது சாட்சாத் ராகவேந்திர ஸ்வாமிகளைத்தான். சிலிர்ப்பை ஏற்படுத்திய அந்தக் கணமும், அதற்கு முன்பாக நள்ளிரவில் பெருமாள் அவர் கனவில் தோன்றி தனக்கு ஒரு கீற்றுக் கொட்டகையாவது போடக்கூடாதா என்று கேட்ட அந்தக் கனவும், அதுவரை கடவுள் மறுப்பாளராக இருந்த சுந்தரநாராயணனின் மனதை அடியோடு மாற்றி, அவரை ஆன்மிக நெறிக்குத் திருப்பியதுடன், பெருமாளின் திருப் பணியில் அவரை முழுமையாக ஈடுபடவும் செய்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்