சித்தமெல்லாம் சித்தமல்லி - 3 !

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிவேதிதா

தான் கண்டெடுத்த தெய்வத் திருவுருவங்களை, தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் கேட்டுக்கொண்டதன்பேரில், வைத்தது வைத்தபடி இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டார் சுந்தரநாராயணன். மற்றபடி, அவர் அந்தத் திருவுருவங்களை உரிய முறையில் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் என்று நினைக்கவே இல்லை. 

ஆனால், அவருடைய மனைவி மட்டும் தினமும் அந்த தெய்வத் திருவுருவங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் விளக்கு ஏற்றி, நைவேத்தியம் செய்து வழிபடுவதை ஆத்மார்த்தமாகச் செய்துவந்தார். அவருடைய பிள்ளைகளும் தாங்கள் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும், போட்டிகளில் ஜெயிக்கவேண்டும் என்பன போன்ற வேண்டுதல்களை பக்திபூர்வமாகச் செய்துவந்தனர். சொல்லப்போனால், அவர்கள் அந்தத் தெய்வத் திருவுருவங்களை, தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே பாவித்து, அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்