அமரருள் உய்விக்கும் திருவல்லம் பரசுராமர்!

புண்ணிய பூமி!காஷ்யபன்

பாரதத்தின் தென்மேற்கு ஓரத்தில் பரந்துள்ள திருவனந்தபுரம், இயற்கை அழகுடன் துலங்கும் ஓர் இனிமைப் பிரதேசம். கலை வளர்க்கும் மலை நகரம். அனந்தன் எனும் அரவின் மீது அரியான பத்மநாபன் துயில் புரியும் நிலையில் கோயில் கொண்டிருக்கும் தலம். இதன் காரணமாகவே இத்தலம் திரு அனந்தபுரம் ஆயிற்று. இத் திருத்தலத்துக்குத் திருமால் வந்து சேர்ந்தது எங்ஙனம்?    

திவாகரமுனி என்றொரு துறவி திருமாலைக் குறித்துத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். ஒரு காலைப் பொழுதில், தவத்தில் அமர இருந்த வேளையில், அவர்  முன் இரண்டு வயது நிரம்பிய இளந்தளிர் ஒன்று வந்து நின்றது. அதன் தெய்விக அழகு முனிவரின் மனதைக் கொள்ளை கொண்டது. அவர் அந்த அழகுச் செல்வத்திடம், தம்முடனேயே இருந்துவிடுமாறு இறைஞ்சினார். குழந்தையும் குதூகலத்துடன் சம்மதித்தது. கூடவே, 'என்னை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். தவறினால், தக்கணமே இங்கிருந்து சென்று விடுவேன்’ என மழலைக்குரலில் ஒரு நிபந்தனையும் விதித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்