உத்ஸவ மூர்த்திகள்!

ஸ்ரீநிவாஸா... கோவிந்தா...

திருப்பதி திருமலையில் திருவேங்கடவன் மட்டுமின்றி, அவரருகில் உள்ள வேறு சில மூர்த்திகளைக் குறித்தும் நாம் அறிவது அவசியம். அவ்வண்ணம் முதலில், போக ஸ்ரீ நிவாஸரைத் தரிசிப்போம். 

போக ஸ்ரீ நிவாஸர்: இவருக்கு மணவாளப்பெருமாள் என்று பெயர். 18 அங்குல உயரமுள்ள இந்த வெள்ளி ஸ்ரீ நிவாஸ விக்கிரகத்துக்கு தினமும் இரவு ஏகாந்த ஸேவை நடைபெறும். கி.பி.614ல் கடவன் பெருந்தேவி என்கிற பல்லவ ராணி சமர்ப்பித்த விக்கிரஹம் இது. தினமும் காலையில் இந்த போக ஸ்ரீ நிவாஸருக்கு ஆகாஸ கங்கா தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடைபெறும். மேலும், புதன் கிழமைகளில் இவருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். மார்கழியில் மட்டும் ஏகாந்த ஸேவையில், போக ஸ்ரீ நிவாஸருக்குப் பதிலாக வெண்ணெய் கிருஷ்ணன் இருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்