சுக்ர யோகம் பொங்கட்டும்!

துர்முகி வருடத்தின் ராஜாவாக சுக்ர பகவான் வருகிறார். எனவே, இந்த தமிழ்ப் புத்தாண்டு சுக்ரனின் ஆதிக்கத்துடன் திகழும். பிருகு முனிவரின் மகன் என்பதால், பார்கவன் என்றொரு பெயரும் அவருக்கு உண்டு. இவருக்கு தேவயானி என்ற மகளும், சந்தன், அமர்கன், த்வஷ்தரன், தாரதன் ஆகிய மகன்களும் உண்டு என்கின்றன புராணங்கள்.

சுக்ரனும், பிரஹஸ்பதியும் ஆங்கிரஸ முனிவரின் குருகுலத்தில் பயின்றார்கள். அங்கே பிரஹஸ்பதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகக் கருதிய சுக்ரன், அங்கிருந்து விலகினார். பிறகு கெளதம முனிவரின் சீடரானார். இந்த முனிவரின் வழிகாட்டுதல்படி, கெளதமி நதிக்கரையில் தவமியற்றி சிவனருளால் சஞ்ஜீவினி மந்திரத்தைப் பெற்றார். பின்னாளில் அசுரகுலத்துக்கு குருவாகி அவர்களுக்கு வழிகாட்டினார் என்கின்றன புராணங்கள்.

ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதி. மீனத்தில் உச்சமும், கன்னியில் நீச்சமும் பெறுபவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுக்ர தசை வருடம் 20 ஆண்டுகள் ஆகும். தமது தசை நடக்கும் காலத்தில், குறிப்பிட்ட ஜாதகனுக்கு பல்வேறு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார் என்பது பொதுவான கருத்து.

எனினும், பூமியில் பிறக்கும் எல்லோருக்குமே சுக்ர தசை வரும் என்று சொல்ல இயலாது. அப்படியான ஜாதகர்கள், துர்முகி வருடத்தில் சுக்ரனை வழிபட்டு சுப பலன்களைப் பெற்று மகிழலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்