வசந்த நவராத்திரி!

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


- என்று அம்பிகையின் அருமை பெருமைகளைப் போற்றுகிறது தேவி மஹாத்மியம். அகிலத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் விழாவே, நவராத்திரி.

கலசத்திலோ கும்பத்திலோ அம்பாளை எழுந்தருளச்செய்து, பலவகையான பொம்மைகளிலும் அவளின் திருவடிவை வழிபட்டு, குழந்தை முதல் மூதாட்டி வரையான பெண்களிலும் அம்பாளையே கண்டு கும்பிட்டு, அவளது அருளை நாடி நிற்கும் நல்விழாவே நவராத்திரி! ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் மஹா நவராத்திரி பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. அது, சாரதா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். இது, புரட்டாசி - ஐப்பசி மாதங்களில் வரும்; முறைப்படி, இதை ஆஸ்வின (ஐப்பசி) நவராத்திரி என்பர்.

வசந்த நவராத்திரி பங்குனி மாதத்தில், ஸ்ரீராம நவமியையொட்டி கொண்டாடப்படுகிறது; வசந்த காலத்தில் வருகிறது. ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. மக நவராத்திரி மாசி மாதம் கொண்டாடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்