முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

இரண்டாம் வீட்டுக்கு உடையவன் லக்னத் துக்கு உடையவனுடன் இணைந்து 6, 8, 12 -  இவற்றில் ஏதாவதொரு வீட்டில் இருந்தால், அந்த ஜாதகனுக்கு பார்வை மங்கலாக இருக்கும். சுக்கிரனும் சந்திரனும் 6, 8, 12-ம் வீடுகளில் சேர்ந்திருக்க நேர்ந்தாலும் பார்வை மங்கலாக இருக்கும். இரண்டுக்கு உடையவன் லக்னத்தில் இருந்தால் ‘நிசாந்தன்’ அதாவது ராக்கண்ணு-இரவில் கண்பார்வை வலு இழந்துவிடும்.  ஆனால், இரண்டுக்கு உடையவன் (நேத்திர ஸ்தானாதிபன்) உச்சம் பெற்று அல்லது சுப கிரகங்களுடன் இணைந்து லக்னத்தில் இடம் பிடித்துவிட்டால், மேற்சொன்ன தோஷங்கள் தென்படாது. கண் பார்வை நல்ல முறையில் அமைந்து, வாழ்நாள் முழுதும் சுகத்தை சுவைப்பான் என்கிறது ஜோதிடம்.

கண்களில் வலுவை, இரண்டுக்கு உடையவனின் தரத்தை வைத்து நிர்ணயிக்க வேண்டும். குடும்பம், தன் பொறுப்பில் வாழும் அனைத்து ரத்தபந்தங்கள், வாக்கு, சொல், சுத்தம், கண்கள்-அதிலும் குறிப்பாக வலது கண், வாழ்க்கை பயணத்தைச் சிறப்பிக்கும் பல்நோக்குக் கல்வி ஆகிய அத்தனையையும் இரண்டுக்கு உடையவனின் தரத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும்.


புலன்களில் கண்களுக்கு முதலிடம் உண்டு என்கிறது ஜோதிடம் (ஸர்வேந்திரி யானாம் நயனம் ப்ரதானம்). தான் பிறந்த பிரபஞ்சத்தைப் (உலகத்தை) பார்க்கக் கண்கள் வேண்டும். வாழ்வில், பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அப்படி, பார்த்துத் தெரிந்துகொள்வதும் ஓர் அறிவாகும். ‘மற்ற புலன்கள் தேவைப்பட்டால் உண்மையை மறைக்கும். கண் உள்ளதை உள்ளபடி காட்டும்; மாற்றிக்காட்டாது. கண்கள் உண்மையைச் சொல்லும் என்று நம்பலாம்’ என்கிறது வேதம் (சஷுர்வைஸத்யம்).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்