கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கடவுளின் விளையாட்டு!தெனாலி, ஓவியம்: மகேஸ்

டவுள் நம்பிக்கை பத்தி ஒரு நாள் வீட்டுல பேச்சு வந்தது. ‘கடவுள் இருக்கார். அவர் பார்த்துப்பார்னு நாம எந்த முயற்சியுமே செய்யாம இருக்கிறது சரியா?’ன்னு கேட்டான் காலேஜ் படிக்கிற பையன்.
‘கடவுள் நேரே வந்து நமக்கு உதவ மாட்டார். தன் பிரதிநிதியா யாரையாவது அனுப்பி வைப்பார். நாம் ஆஸ்பத்திரிக்குப் போறோம். அங்கே டாக்டர் மூலமா நமக்கு உதவுவார் கடவுள். ஆஸ்பத்திரிக்குப் போறது நம்ம முயற்சி. அதுக்கான பலனை டாக்டர் மூலமா கொடுக்குறது கடவுளோட அருள்!’னு விளக்கினார் அப்பா.

அப்பா! ‘கடவுள் நம்பிக்கைக்கும் டாக்டர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் என்ன சம்பந்தம்? மருந்துகளுக்கு அதுக்குண்டான பவர் இருக்கத்தானே செய்யும்? அது நோயைக் குணப்படுத்தாதா?’ என்று கேட்டான் பையன்.

‘அப்படி இல்லேப்பா! இந்த மருந்தை எடுத்துக்கிட்டா குணமாயிடும்னு நம்ம மனசு நம்பணும். அதுக்கு முதல்ல நாம தைரியமா இருக்கணும். கடவுள் நம்பிக்கை உள்ளவன் தைரியத்தைக் கைவிட மாட்டான்’னு சொன்ன அப்பா, ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒரு படகில் கணவனும் மனைவியும் ஜாலி ரைடு போனாங்க. ஒரு ஆர்வத்துல கரையை விட்டு விலகி, ரொம்ப தூரம் கடலுக்குள்ளே போயிட்டாங்க. அப்போ கடுமையா புயல் வீச, படகு தள்ளாடிச்சு.
மனைவி பயந்துபோய் ‘படகை கரைக்குத் திருப்புங்க’ன்னு பதறினா. ‘முடிஞ்சா திருப்பமாட்டேனா? அது என் கன்ட்ரோலை மீறிப் போயிட்டிருக்கு’ன்னு சொன்னான் கணவன். அது அவள் பயத்தை இன்னும் அதிகமாக்கிடுச்சு. ஆனா, அவன் குரல்ல கொஞ்சம்கூட பயத்துக்கான அறிகுறியே இல்லே.

‘என்னங்க, நமக்கு நீச்சல் கூடத் தெரியாது. என்ன ஆகுமோன்னு, நான் பதறிக்கிட்டிருக்கேன். நீங்க கொஞ்சம்கூட பதற்றமே இல்லாம உட்கார்ந்திருக்கீங்க!' என ஆச்சரியமா கேட்டா மனைவி.
கணவன் சட்டுனு எழுந்தான். ஆப்பிள் நறுக்க வெச்சிருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்துல கூர் முனையை வெச்சான். அவ கொஞ்சம்கூட பயப்படலே! ‘என்ன இது விளையாட்டு? உக்காருங்க. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க’ன்னா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்